"இங்க வாடா... இத கழட்டிவிடுடா...” என பேரனை அழைத்து செருப்பை கழற்ற சொல்லும் எண்ணத்தில் தான் கூறினேன்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் பழங்குடியின சிறுவனை அழைத்து தன்னுடைய காலணிகளை கழட்டி விட சொன்ன வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு குழந்தைகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கண்டனம் எழுந்த நிலையில், தன்னுடைய பேரனை அழைத்து செருப்பை கழற்றச் சொல்வது போன்ற எண்ணத்தில் கூறியதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் பழங்குடியின சிறுவனை அழைத்து தன்னுடைய காலணிகளை கழட்டி விட சொன்ன வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு குழந்தைகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கண்டனம் எழுந்த நிலையில், தன்னுடைய பேரனை அழைத்து செருப்பை கழற்றச் சொல்வது போன்ற எண்ணத்தில் கூறியதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.



நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று யானைகள் முகாமை பார்வையிட சென்றார். அப்போது, அவர் கோயிலுக்கு செல்வதற்கு முன்பு, அங்கே விளையாடிக் கொண்டிருந்த ஒரு பழங்குடியின சிறுவனை அழைத்து தன்னுடைய காலணிகளை கழட்டி விடும் படி கூறினார். இந்த சம்பவத்தின் போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் அங்கிருந்தனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.



இதனைத் தொடர்ந்து இந்த படக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக வந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, தான் தன்னுடைய பேரனை அழைத்து செருப்பை கழற்ற சொல்வது போன்ற எண்ணத்தில்தான் கூறினேனே தவிர, எந்த விதமான உள்நோக்கமும் தனக்கு கிடையாது என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.



இருப்பினும் இவர் அதிகார தோரணையில், டேய் வாடா.. வந்து என் செருப்பை கழட்டி விட்டுடா.. என்று கூறும் வார்த்தைகள் குழந்தைகள் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல்‌ சீனிவாசன்‌ போன்று ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார்‌ உள்ளிட்ட பல அமைச்சர்கள்‌ இருக்கின்றனர்‌ எனவும் அமைச்சர்கள்‌ தங்கள்‌ எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு மாறாக செயல்படுவதாக திமுக தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ குற்றம்‌ சாட்டியுள்ளார்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...